
தனது தீவிர ஆதரவாளர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் வாக்களித்தால் 15-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறமுடியும் என பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிஷி ரம்லி தெரிவித்தார்.
சராசரியாக வாக்களிக்கும் 60 விழுக்காட்டு வாக்காளர்களுடன் இன்னும் 10 விழுக்காட்டினர் அதிகரித்தால் இது சாத்தியமாகும்.
முதல் முறையாக வாக்களிப்பவர்களில் 30 விழுக்காட்டினரின் வாக்குகளையும் இதற்கு முன் பக்காத்தான் ஹராப்பான் பெற்று வந்தது.
இவ்வாறான புதிய வாக்காளர்களில் இன்னும் 5 விழுக்காட்டினர் நம்பிக்கை கூட்டணியை ஆதரித்தாலும் பக்காத்தான் ஹரப்பான், கூட்டரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற முடியும் என ரபிஷி சுட்டிக்காட்டினார்.
வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
