
மாக்காவ் மோசடியால் ஏமாற்றப்பட்ட ஓய்வு பெற்ற நபர் , தனது சேமிப்பு பணம் அனைத்தையும் இழந்திருக்கின்றார். 68 வயதான அந்த முதியவரை, போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்ட நபர் ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அந்த நபர், அம்முதியவர் சட்டவிரோதமான பொருளை உட்கொண்டு இருப்பதாகவும், பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றார். அதையடுத்து, அந்த முதியவரின் வங்கி கணக்கு சோதனை செய்யப்படுமெனவும், விசாரணைக்காக சேமிப்பில் இருக்கும் பணத்தை தான் கொடுக்கும் வங்கி கணக்கிற்கு மாற்றும்படியும் அழைத்த நபர் கூறியிருக்கின்றார்.
அதை நம்பி 22 முறை தனது சேமிப்பிலிருந்து பணத்தை வெளியேற்றி மற்றொரு வங்கியில் போட்டதாக, ஜோகூர் குற்றப் புலனாய்வு துறையின் துணை தலைமை ஆணையர் Amran Md Jusin தெரிவித்தார்.
