
கடந்த மே மாதம் 119 மியன்மார் குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தியதாக இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐவர் மீது அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் கெடா போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஆவார்.
அவருடன், சொந்தமாக வேலை செய்யும் ஆடவனும் மீனவன் ஒருவனும் ஆட்கடத்தல் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உத்தரவாதத்தில் விடுவிக்க அனுமதியளிக்காத நீதிபதி இந்த வழக்கு மீண்டும் ஜூலை 4-ஆம் தேதி விசாரணைக்கு வருமென அறிவித்தார்.
