25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

ஸுரைடாவின் தவளைப் போக்கு மாறவே இல்லை:
சரவாக் எம்பி-க்களுக்கு வலை விரிக்கிறார்

புதிய கட்சியாக உருவெடுத்துள்ள பார்ட்டி பங்சா மலேசியா-வின் அறிவிக்கப்படாத தலைவர் டத்தோ ஸுரைடா கமாருடின், தீபகற்ப மலேசியாவைக் கடந்து சரவாக் மாநிலத்திலும் மக்கள் பிரதிநிதிகளை, குறிப்பாக எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் களைக்கப்படலாம் என்ற நிலையிலும் அணிதாவும்படி எம்பி-க்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

Parti Sarawak Bersatu சார்பில் ஸ்ரீ அமான் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட Masir Kujat மற்றும் Lubok Antu தொகுதியில் இருந்து பிகேஆர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட Jugah Muyang ஆகிய இருவரும் ஏற்கெனவே தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு தத்தம் கட்சியில் இருந்து விலகி, தங்களை சுயேச்சை எம்பி-க்களாக பிரகடனம் செய்து கொண்டு, அதற்கான அணுகூலத்துடன் இருக்கின்றனர்.

இப்பொழுது, கோத்தா கினபாலு சென்றுள்ள ஸுரைடா, மே-26இல் இரண்டாவது முறையாக அணிதாவி சங்கமமாகியுள்ள பார்ட்டி பங்சா மலேசியா-விற்கு தன்னைப்போல மீண்டும் அணிதாவி பார்ட்டி பங்சா மலேசியா-வில் இணைந்துகொள்ளும்படி சுயேச்சை எம்பிக்களான Masir Kujat, Jugah Muyang இருவருக்கும் பகிரங்கமாக வலைவீசியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles