
வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கும் நிலையில், அரசாங்கம் Bantuan Keluarga Malaysia-BKM திட்டத்தின் உதவித் தொகையை அதிகரித்திருக்கின்றது.
அந்த உதவித் தொகைக்கு தகுதி பெற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கூடுதலாக 100 வெள்ளியும் திருமணமாகாதவர்களுக்கு கூடுதலாக 50 வெள்ளியும் வழங்கப்படுமென பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.
86 லட்சம் பேர் பயனடையும் இந்த உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட உதவித் தொகையுடன் கூடுதல் தொகையும் சேர்த்து 500 வெள்ளியை மக்கள் பெறுவார்கள். இந்த உதவித்தொகை, ஜூன் 27 முதல் தகுதி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
