
சிலாங்கூர் மாநில இளைஞர்கள் தங்கள் கல்வித் தேவைக்காக, ஜூலை 31-ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநில அரச கல்வி உதவி நிதியத்தில் இருந்து டிப்ளமோ, இளங்கலை மற்றும் மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி நிலைக்கு ஏற்ப நிதியுதவி விகிதம் மாறுபடும். இந்தச் சிறப்பு உதவியானது, சிலாங்கூர் மாநில மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. கல்விக் கடனுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாத தொடக்கத்தில் திறக்கப்பட்டன; அதற்கான இணையதளம் https://danapendidikan.selangor.gov.my என்றும் மந்திரி பெசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
