
‘1எம்டிபி’ நடைமுறை தொடர்பாக அனைத்து முடிவுகளையும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்தான் செய்தார் என்று உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் 2-ஆவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ Ahmad Husni Mohamad Hanadzlah, 1எம்டிபி வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அனைத்து முடிவுகளையும் நஜீப் செய்தபின்னர்தான் அது அடுத்தக்கட்டத்திற்கு நகரும் எத் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பில் நேற்று நஜீப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லா விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று அரசத் தரப்பு தலைமை வழக்கறிஞர் ஸ்ரீராம் விசாரனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
