
உணவு விநியோகப் பற்றாக்குறைச் சிக்கலுக்கு தேசிய உணவுக் கையிருப்பு என்பது தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்குமேத் தவிர, அது நிரந்தரத் தீர்வாக இருக்காது என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Isham Jalil தெரிவித்துள்ளார்.
தேசிய உணவுக் கையிருப்பு யோசனையை முன்னதாக, பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி முன்வைத்த நிலையில், அவருக்கு இவ்வாறு மறுமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்காமல், உணவு உற்பத்தியைப் பெருக்குவதுதான் உணவு விநியோகத் தடங்கலுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் Isham Jalil குறிப்பிட்டுள்ளார்
