
பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ Tajuddin Abdul Rahman-னுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அம்னோ ஒழுங்கு நடவடிக்கை குழுவைப் பொறுத்ததாகும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கட்சியின் சட்டவிதிகளை தாம் மதிப்பதாக தேசிய முன்னணியின் தலைவருமான ஸாஹிட் கூறினார். முதலில் அம்னோ உச்ச மன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்படும். அதன் பிறகு தாஜூடினுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் பரிந்துரைக்கப்படும் என அவர் கூறினார்.
தாஜூடின் பகிரங்கப்படுத்திய சில குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என ஸாஹிட்டிடம் வினவப்பட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
