27.5 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

உணவு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முனைப்பு

🔥 Views : 17
👁 Reading Now : 45

நாட்டில் உணவு கையிருப்பு எப்போதும் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய, மாநில அரசாங்கங்கள் விளைநிலங்களின் பரப்பளவை அதிகரிக்கவும், நெல்வயல்களை தக்க வைத்துக் கொள்ளவும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன் தொடர்பில், மாநில அரசாங்கங்கள், விவசாய நிலங்களை பாதுகாக்கப்-பட்ட நிலப் பகுதிகளாக அறிவிக்க இணக்கம் தெரிவித்திருப்பதாக, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

மேலும் விவசாய நிலங்களை, மாநில அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கி, அந்த நிறுவனங்கள் அந்நிலங்களை பின்னர் விவசாயிகளுக்கு 30 ஆண்டுகள் வரை வாடகைக்கு விடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநில மெந்திரி பெசார்கள், முதலமைச்சர்கள் ஆகியோருடன் சந்திப்பு நடத்திய பின்னர் பிரதமர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles