
பகாங், Jalan Kuantan – Segamat, எண்ணெய் நிலையம் அருகில், இரு வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 33 வயது Muhammad Rosli Ibrahim, 35 வயது Nor Afikah Abdullah Sani, மற்றும் அவர்களது 7, 6 வயதுடைய இரு பிள்ளைகளும் ஒரு குழந்தையும் அடங்கும்.
நேற்று பிற்பகல் 3:40 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்து Toyota காரையும், டிரெலர் வாகனத்தையும் உட்படுத்தியிருந்தது என குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.



