
பொதுத் தேர்தலும் நடைபெறவில்லை. கட்சித் தேர்தலும் நடத்தப்படவில்லை. இவ்வாறு இருக்க கட்சியின் புதிய தலைமைத்துவம் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்க முடியும் என கூறியிருக்கின்றார் அம்னோ தலைமைச் செயலாளர் Ahmad Maslan.
அம்னோவின் புதிய தலைமைத்துவம் என குறிப்பிட்டு வெளியாகியிருக்கும் பட்டியல் குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார். முன்னதாக சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கிய அந்த பட்டியலில், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அம்னோவின் புதிய தலைவராகவும், Annuar Musa துணைத் தலைவராகவும், Hishamuddin Hussein, Mahdzir Khalid, Khairy Jamaludin ஆகியோர் உதவித் தலைவர்களாகவும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.



