31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

பொருள் விலை குறைக்கப்படாவிட்டால்
-வீதி ஆர்ப்பாட்டம்: உயர்க்கல்வி மாணவர்கள் எச்சரிக்கை

🔥 Views : 5
👁 Reading Now : 59

மக்களின் வாழ்க்கை சுமையாக இருப்பதற்கு காரணமான பொருள் விலை அதிக்கரிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், அரசுக்கு எதிராக வீதி ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம் என்று 20 மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த மாணவர் அமைப்புகளின் பேச்சாளரும் மலேசிய பன்னாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவருமான Aliff Naif, இதன் தொடர்பில் 5 கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுள்ளார்.

மக்களுக்கு உதவும் வகையில் அமைச்சர்கள்-துணை அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைத்தல், மளிகைப் பொருட்களுக்கான மானியத்தை தொடர்தல், பல்கலைக்கழகங்களில் விற்கப்படும் உணவு விலையைக் கட்டுப்படுத்துதல், நாட்டின் உணவு பாதுகாப்புப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை இந்த மாணவர்க் கூட்டமைப்பு முன்வைப்பதாக Aliff Naif தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் இதன் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர்க் கூட்டத்தில் அறிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles