26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஸ்ரீ பெட்டாலிங் கும்பல் மோதல்:
-20 பேருக்கு போலீஸ் வலை

🔥 Views : 9
👁 Reading Now : 59

ஸ்ரீ பெட்டாலிங் வட்டாரத்தில் இரும்புக் கருவிகளையும் மது போத்தல்களையும் பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்ட இரு கும்பலைச் சேர்ந்த 20 பேரை போலிசார் தேடி வருவகின்றனர்.

தங்களுக்குள் மோதிக்கொண்ட இந்தக் கலவரக் கும்பல்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு வாகத்தின் உரிமையாளர் தன்னுடைய மகிழுந்தின் கண்ணாடிகள் சேதப்பட்டதாக போலீசில் புகார் செய்ததை அடுத்து போலீசார் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பீனல் கோடு சட்டம் 427-ஆவது பிரிவின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வழக்கில், சம்பந்தப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு சிறைவாசம், அல்லது தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த திங்கட்கிழமை காலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்துடன் 03-2297 9222 என்ற எண்ணிலும் கோலாலம்பூர் போலீசாருக்கு 03-2115 9999 என்ற எண்ணிலும் அழைத்து தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles