30.7 C
Kuala Lumpur
Saturday, March 7, 2026

Vetri

Digi-Celcom இணைகின்றன

நாட்டின் தகவல் தொடர்பு உலகில் நன்கு அறியப்பட்ட செல்கோம் நிறுவனமும் Digi நிறுவனமும் Celcom Digi Bhd என்ற பெயரில் ஒன்றிணைகின்றன.

இதன் தொடர்பில் செல்கோம் தகவல் பல்லூடக சேவையை நடத்தும் xiata Group நிறுவனமும் Digi.Com நிறுவனமும் முன்னமே ஒப்பந்தம் கண்டுள்ள நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ஒன்றிணைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் தகவல் உலகில் சேவையை வழங்கும் நடவடிக்கையை எட்டியுள்ளன.

இரு தரப்பினரும் ஒன்றிணைந்து சிறந்த இணையக் கட்டமைப்பை உருவாக்குதல், அனைத்து தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், வர்த்தக உலகில் வளர்ந்து வரும் பல்லூடகத் தேவையை ஈடுகட்டுதல், விவேக தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கான சேவையும் மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களில் முனைப்பு காட்டி ஒன்றைணைந்த வளர்ச்சியை எட்டுவோம் என்று இன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles