
பத்து பூத்தே தீவு விவகாரம் தொடர்பான சிறப்பு விசாரைணைக் குழுவின் தலைவராக சட்டத்துறை முன்னாள் தலைவர் எஃபெண்டி அலி இருப்பதை ஆட்சேபித்து வெளிநடப்பு செய்த டாக்டர் மகாதீர், அந்தக் கூட்டத்திற்கு செல்லாமலே இருந்திருக்கலாம்;
ஆனால், கூட்டத்திற்கு சென்றுவிட்டு, குழுவினரின் கேள்விக்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்த டாக்டர் மகாதீர், தனி மனிதர்களுக்கு எதிரான தன் வஞ்சகக் குணத்தை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
அந்த விசாரணைக் அந்தக் குழுவின் தலைவராக அவர் இருக்கும்வரை தாம் எந்த விளக்கத்தையும் அளிக்கப்போவதில்லையென எனத் தெரிவித்திருக்கும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், அந்தக் கூட்டத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்?.



