25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிதான் அந்நிய வந்தேறிகளுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கியது!

சபாந் தேர்தலில் ஆதரவு வாக்குகளைக் கவர தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி ஒன்று ஆவணமற்ற அந்நிய குடியேறிகளுக்கு மறைமுகமாக அடையாளக் கார்டுகளை வழங்கியதாக பார்ட்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) கட்சித் தலைவர் மேக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார். அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற அந்நியர்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கும் நாட்டின்பால் துரோகச் செயலைப் புரிந்திருப்பதாகவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனை அரச விசாரணை ஆனையும் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆவணமற்ற அந்நியர்களின் பிரச்சினையை தேசிய முன்னணி அரசாங்கம் இன்னமும் தீர்க்க முடியாமல் தள்ளாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 14ஆவது பொதுத்தேர்தலில் தோல்வியை அடுத்து, பிபிஎஸ் தேசிய முன்னணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தகக்து.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles