25.3 C
Kuala Lumpur
Wednesday, April 29, 2026

Vetri

வாரத்தில் 4 நாள் வேலைத் திட்டதை சிறப்புக் குழு ஆய்வு செய்யும்

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையைக் கொண்டுவர பொதுச் சேவை இலாகா ஆய்வு செய்ய சிறப்புச் செயற்குழுவை உருவாக்கியுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஃபிக் அப்துல்லா தெரிவித்துள்ளார். அதில் எழும் பிரச்சினைகளைத் துல்லியமாக ஆராய்ந்த பின்னரே உறுதியான முடிவை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்தக் குழு எல்லாப் பிரிவு தொழில்களிலும் ஆழமான ஆய்வைச் செய்வதோடு கூடிய, குறைந்த வேலை நேரம், 1955ஆம் ஆண்டு தொழிலியல் சட்டம் ஆகிவற்றை மீறாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். அதில் பல்வேறு பிரச்சினைகள், பல வித்தியாசமான வேலைகளும் வேலை நாள்களும் விடுப்பும் வெவ்வேறு விதமாக இருப்பதால், ஆய்வுகள் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட வேண்டும். இந்த 4 நாள் வேலைத் திட்டம் கடந்த ஜூனில் இங்கிலாந்தில் 70 நிறுவனங்கள் உள்ளடக்கிய 3,000 தொழிலாளார்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இங்கும் அதற்கான கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles