
ஊழல் தடுப்பு ஆணையர் அஸாம் பாக்கி விளக்க முடியாத பங்குப் பத்திர முதலீட்டில் இரண்டு மில்லியன் பங்குகளைக் கொள்முதல் செய்திருந்த வழக்கு நாட்டில் பூகம்பத்தையே ஏற்படுத்தி இருந்தது.
அஸாம் பாக்கியின் மீது வழக்கு தொடுக்க முகாந்திரம் இல்லையென்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசக வாரியத் தலைவர் அபு ஸாஹார் ஊஜாங் அறிவித்து அவரைத் தப்பிக்க வைத்தார்.
இந்நிலையில், அபு ஸாஹாரின் தன்மூப்பான முடிவை எதிர்த்த ஆலோசனை வாரிய உறுப்பினர்கள் இந்நேரம் பதவி விலகியிருக்க வேண்டும்.
தாம் அந்தக் குழுவில் இருந்து விலகிய பின்னார், அதன் உறுப்பினர் ஒருவர் சமூக ஆர்வலர் ஒருவருக்குப் பதவியை வழங்க முன்வந்திருப்பது தெரிய வருவதால், ஆலோசனை வாரிய உறுப்பினர்களை அரசுதான் நியமிக்க வெண்டுமே ஒழிய தனிப்பட உறுப்பினர் அல்லவென அதன் முன்னாள் உறுப்பினர் எட்மண்ட் டெரன்ஸ் கோமஸ் வலியுறுத்தியுள்ளார்.
