26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சுங்கை பூலோவில் நடந்த சாலை விபத்தில் ஓட்டுநர் பலி, மாணவர்கள் அறுவர் காயம்

சிலாங்கூர் சுங்கை பூலோ, ஜாலான் செளஜானாவில் நடந்த சாலை விபத்தில் காரோட்டுநர் மரணமடைந்த வேளையில், ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது நேற்று பிற்பகல் 1.08 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், முச்சந்தியில் சென்ற பெரோடுவா கார் எதிரே வந்த புரோட்டோன் எக்ஸோரா காரோடு மோதியதில், அது குப்புறக் கவிழ்ந்து அதன் ஓட்டுநர் காயமடைந்தார். காயமடைந்த ஓட்டுநர் முகமட் ஸக்கி அரிஃபின்(52) என அடையாளம் காணப்பட்டது. காயமடைந்த 6 மாணவர்கள், பெண் காரோட்டுநர் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles