28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நீதிமன்றத்தைக் காப்பிக்கடையாக நடத்த வேண்டாம்

🔥 Views : 7
👁 Reading Now : 58

நீதிமன்றத்தை காப்பிக் கடையாகப் பாவித்து கேள்களுக்கு விடையளிக்கும்போது விரினான விளக்கத்தை அளிக்க வேண்டாமென ஊழல் வழக்குகளில் சாட்சியம் அளித்து வரும் அமாட் ஸாஹிட் ஹமிடி பலமுறை நினைவுறுத்தப்பட்டார். அக்கால் பூடி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தின் விசாரணையில் கலந்து கொண்டுள்ள ஸாஹிடி, கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டுமே ஒழிய நீதிமன்றத்தில் தமது விளக்கத்தை அளித்து அதனைச் சிறுமைப் படுத்தக் கூடாதென அரசின் வழக்கறிஞர் ராஜா ரொஸேலா ராஜா தோரன் வலியுறுத்தினார். அக்கால் பூடி அறக்கட்டளையின் பணத்தை லூயிஸ் வழக்கறிஞர் நிறுவனத்தில் நீண்ட கால வைப்பு நிதியாக வைத்ததில், தமது நிர்வாகச் செயலாளர் மேஜர் மஸ்லினா மஸ்லானுக்கான இருந்த தொடர்பைப் பற்றி நேரடியான பதிலைச் சொல்லாமல் பல முறை சுற்றி வளைத்துப் பதிலளித்ததால் அவருக்கு ராஜா ரொஸேலா எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles