28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நீதிமன்ற வழக்குகளில் தலையிட மறுத்ததால், பிரதமராகும் வாய்ப்பை இழந்தேன்

🔥 Views : 6
👁 Reading Now : 26

நீதிமன்றத் திரளைகளின் வழக்குகளில் தலையிட்டு அம்னோ அரசியல்வாதிகளை விடுவிக்க வேண்டுமென்ற நெருக்குதலுக்குப் அடிபணியாமல் உறுதியாக இருந்ததால்தான் தாம் பிரதமராகும் வாய்ப்பை இழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். தம்மை பிரதமராக்க அம்னோவில் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ததால், அதனை முழுமையாக நம்பியே தமக்கு ஆட்சியமைக்கப் போதுமான ஆதரவு இருப்பதாக தாம் கூறி வந்ததது உண்மையே என்று அவர் கூறினார். ஆயினும், அம்னோ தலைவர்களின் ஊழல் வழக்குகளில் இருந்து அவர்களை விடுவிக்க தாம் சம்மதிக்காமல் உறுதியாக இருந்ததால், ஒரு சில அம்னோ எம்பிக்கள் மனம் மாறி, அதிலிருந்து பின் வாங்கியதால் தாம் பேரரசரிடம் உண்மையை விளக்க முடியாமல் போனதாக அன்வார் குறிப்பிட்டார். இவ்வளவு காலம் தாம் இந்த விவகாரம் குறித்து மெளனம் காத்தது, அரண்மணையை இவ்விவகாரதில் இழுக்கக் கூடாதென்ற நல்ல நோக்கத்தில்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles