
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பாசார் செனியில் பணவீக்கத்தையும் விலைவாசியையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை ஏற்று நடத்திய Gabungan Gerakan Mahasiswa (காபுங்கான் கெராக்கான் மஹாசிஸ்வா) அமைப்பு இந்த விசாரணையின் வழி மாணவர்களை அச்சுறுத்த வேண்டாமென கேட்டுக் கொண்டது.
அரசியலமைப்பு விதியின்படி மக்கள் ஒன்றுகூட அனுமதி இருப்பதால், அவர்களின் மீது விசாரணை கூடாதென்று வலியுறுத்தினர்.
அதே வேளையில், கடந்த வெள்ளிக்கிழமை அமானாவின் தலைமையில் கோலாலம்பூர் கம்போங் பாரு மஸ்ஜிட் ஜாமேக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
