மனித உரிமை ஆணையமான Suhakamமின் புதிய உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லையென்று 102 அரசு சாரா இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் அவர்கள் மனித உரிமை சேவைகளில் ஈடுபட்டதாக எந்தவொரு ஆதாரமும் இல்லையென்றும் அந்த அமைப்புகள் குறிப்பிட்டன.
அதன் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ரஹ்மாட் முகமட், ரோம் சாசனம் மற்றும் அனைத்துலக இன பாகுபாட்டினை எதிர்க்கும் ஐநாவின் அனைத்துலக சாசனத்துக்கு எதிராக அறிக்கையைத் தயாரித்து, சாசனத்தை ஆட்சியாளார்கள் நிராகரிக்க வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அம்மாதிரியான நபர்கள் அதில் உறுப்பியம் பெற்றிருந்தால் மக்கள் சுஹாமின் மீது நம்பிக்கையை இழப்பர் என்றும் சுஹாகாம் சுதந்திரமாகச் செயலாற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.