
இந்தோனேசிய பணிப்பெண் அடெலினா லிசாவோ(Adelina lisao) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 62 வயதான Ambiga (அம்பிகா) விடுவிக்கப்பட்டது தவறான முடிவு என முன்னாள் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ Tommy Thomas (டோமி தோமஸ்) குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது சம்பந்தமாக தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் முதலில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய விடுவிப்பு என்று சொல்லப்பட்டதாகவும் அது பொதுமக்களின் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர், அவரின் விடுதலையை ரத்து செய்யக் கோரியபோது, மேல் முறையீடு, கூட்டரசு நீதிமன்றமும் உயர்நீதிமன்ற தீர்ப்பினை நிலைநிறுத்தி அவரை விடுவித்தன என்று டோமி தெரிவித்தார்.
பல வழக்கறிஞர்களும் சட்டத்துறை அதிகாரிகளும் ஆளாளாக்கு குழப்பமான கருத்துகளைக் கூறியதால் வந்த வினை இது என்று அவர் குறிப்பிட்டார்.
