
துணைப் பிரதமர் பதவியை முஹிடின் யாசின் கோருவதில் தவறேதும் இல்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அனுவார் மூசா குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்தில் பெர்சத்து அங்கம் வகுத்து வருவதால், அவரின் கோரிக்கையில் தவறில்லை என்று அவர் தெரிவித்தார்.
தாம் பிரதமரைச் சந்தித்து துணைப் பிரதமர் பற்றிப் பேசியதாகவும் அந்தப் பதவியானது இதற்கு முன்னர் உறுதி கூறப்பட்டதாகவும், அரசாங்கத்தில் தேசிய முன்னணி, பெரிக்காதான் நேஷனல், ஜிபிஎஸ் ஆகிவை இணைந்துள்ளதால் தாம் அப்பதவியைக் கோரியதாக முஹிடின் தெரிவித்தார்.
எனினும், இக்கட்டான நேரத்தில் அப்பதவியைக் கோரியது தவறு என்று நஜிப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
