
பழமைவாதம் பேசி, மற்ற மொழிகளைப் படிக்க வேண்டாமென அறைகூவல் விடுக்கும் பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்) அரசுப் பதவியிலிருந்து விலக வேண்டுமென பண்டார் கூச்சிங் எம்பி டாக்டர் kelvin yi (கெல்வின் ஈ) கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹாடியின் குறுகிய மனப்போக்கு மலேசியாவின் போட்டியிடும் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்றும் அதனை யாரும் பின்பற்றுவது சரிவையே கொண்டுவரும் என்று கெல்வின் எச்சரித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அரசின் சிறப்புத் தூதராக இருக்கும் ஹாடி, ஆங்கிலத்தை முன்னெடுப்போர் காலனித்துவ மனப்பான்மை கொண்டு காலனித்துவ முதலாளிகளுக்கு ஊழியம் செய்வதாகவும் அவர்கள் தேசிய மொழியை மதிக்காதவர்கள் என்றும் விமர்சித்துள்ளது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
