30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

ஊழல்வாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்

நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அரசியல்வாதிகள் மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதை விடுத்து எப்படி, எவ்வாறு சொத்துகளைச் சேர்ப்பது என்பதிலேயே குறிக்கோளாக இருப்பதாக கெ அடிலான் தலைவர் Anwar Ibrahim (டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்) குறிப்பிட்டார்.
மக்களின் நலனை முன்னிட்டு பாடுபடுவோர் குறைந்து, விலைவாசி ஏற்றத்தால் மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த ஊழல் பெருச்சாளிகளுக்கு மக்கள் வரவேற்பு கொடுப்பது வெட்கக் கேடானது என்று தஞ்சோங் காராங்கில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானின் கீழ் இயங்கும் சிலாங்கூர் மாநில அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகவும் குழந்தை பிறந்ததிலிருந்து சாகும் வரை அதன் நலனி ல் அக்கறை காட்டி, அனைத்து உதவிகளையும் செய்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதால், அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தானையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles