
Joseph Pairin Kitingan ஜோசப் பைரின் கிட்டிங்கான் சபாவின் முதலமைச்சராக இருந்தபோது ஆவணமற்ற கள்ளக்குடியேறிகள் பிரச்சினையைத் தடுக்க என்ன செய்தார் என்பதை விளக்க வேண்டுமென Lim Kit Siang (லிம் கிட் சியாங்) கேள்வி எழுப்பினார்.
அவரது காலத்தில் அது சம்பந்தமாக அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது 5,000 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அரசு அதில் 368 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.
இந்தப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, அமைச்சர் மேக்சிமஸ் ஓங்கிலி தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி ஒன்று அந்நிய நாட்டவர்களுக்கு அடையாளக் கார்டுகளை வழங்கி இருப்பதாகக் குற்றம் சாட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த விவகாரத்தில் தமது கருத்தினையும் விளக்கத்தையும் பைரின் பொதுமக்களுக்கு விளக்க வேண்டுமென கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.
