
நீண்ட காலம் வனவாசம் சென்று விட்டு மீண்டும் தாம் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளதை சிலர் கேள்வி எழுப்புவதாக கெ அடிலானின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள Rafizi Ramli (ரபிஸி ரம்லி) குறிப்பிட்டார்.
நாட்டில் ஊழல் புரியும் அரசியல்வாதிகள் அதிகரித்து, மக்களின் நலனில் அக்கறை கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மக்கள் சேவையைப் புறக்கணித்து விட்டு குடும்பத்துக்குச் சொத்து சேர்ப்பதே அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டனார்.
மக்களுக்கு நிறைவான சேவையை வழங்கி, பொருளாதாரத்தை உயர்த்தி, வேலை வாய்புகளை அதிகரித்து இளைஞர்களுக்கு வழி காட்டுவதோடு ஆட்சியைப் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைப்பற்ற உதவி செய்யவே தாம் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பி இருப்பதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
