அம்னோவின் தேர்தலை எப்போது நடத்தலாம் என்பதை சங்கங்களின் பதிவதிகாரி இம்மாதம் 16ஆம் தேதி அறிவிப்பார் என்று தெரிகிறது.
கட்சியின் தேர்தலை ஒத்தி வைக்கும் வகையில் துணை விதிகளில் திருத்தம் செய்யும் விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவதிகாரி இன்னமும் பரிசீலிக்கவில்லை என்று தெரிகிறது.
அதற்கான பதில் 60 நாள்களுக்குள் தெரிய வேண்டுமென்றும் அத்தவணைக் காலம் ஜூலை 16ஆம் தேதியோடு முடிவடைவதாகவும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்கும் சட்டத்திருத்தம் மே 15ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. பொதுத்தேர்தல் நடந்து 6 மாதங்களுக்குப் பின்னர் கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்த சட்டத்தைத் திருத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.