
செயல் திறனில்லாத பாஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசுக்கு கெட்ட பெயரைத் தேடித் தருவதாக ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் Nur Jazlan Mohamed (நுர் ஜஸ்லான் முகமட்) சாடினார்.
பாஸ் அமைச்சர்கள் தங்களின் சுய நலனில் மிகவும் அக்கறை காட்டி, மக்களுக்கான சேவைகளில் கோட்டை விட்டிருப்பதால், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தகுதியில்லாத பாஸ் கட்சி அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத காரணத்தினால், அவர்களின் மூலம் உருவாகும் பிரச்சினைகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்களுக்குத் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. தங்களது அமைச்சுகளை நன்கு நிர்வகிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆனால், எல்லாம் தெரிந்தவர்கள் போல பாவ்லா காட்டுவதில் வல்லவர்களாகத் திகழ்வதாக நுர் ஜஸ்லான் இடித்துரைத்தார்.
