30.1 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை வடிவமைப்பதில் சிலாங்கூர் முன்னோடி – சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்

நேற்று காலை 9.00 மணிக்கு, கிள்ளான் எக்மார் வைண்டம் விடுதியில் ”மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல்” என்ற கருத்தரங்கம் கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. மலேசிய இந்திய சமுதாயத்தின் மேம்பாடு வடிவமைத்தல் என்ற தலைப்பில் டிஎம் என லிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமாட் அப்துல் காலிட் மற்றும் எலைன்ஸ் வங்கியின் முன்னாள் பொருளாதார வல்லுநர் மனோகரன் மொட்டையன் ஆகியோரும் வழங்கிய ஆய்வு கட்டுரைகளுக்கு பின் அங்கு வந்திருந்த 63 பொது இயக்கங்களின் விவாதங்களின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட 9 தொகுப்பை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ, ஜ.செ.க பொதுச்செயலாளர் அந்தோனி லோக், மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் விளக்கினார்.

அடுத்து பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் , கடந்த 15 வருடங்களாக இந்தியர்களிடம் மிக அணுக்கமாக பழகி வருவதால் அவர்களின் எதிர்பார்ப்பையும் தேவைகளையும் தாம் அறிந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

தானைய தலைவர்கள் 50 வருடங்களில் தீர்க்க தவறிய விவகாரத்தை அவர் தனது முதல் தவணையில் தீர்த்து வைத்ததாக கூறினார். மாலை 4.30 க்கு கருத்தரங்கம் நிறைவுபெற, இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு நல்ல பதிலை சிலாங்கூர் மந்திரி புசார் வழங்கியதில், கலந்துகொண்ட பேராளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles