30.1 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

அம்னோவின் ஆதரவு பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு எப்போதும் உண்டு

15ஆவது பொதுத்தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் Ismail Sabri Yaakob இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் நாட்டின் பிரதமர் என்பதை அம்னோ உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் துணைத் தலைவர் Mohamad Hasan (முகமட் ஹசான்) அறிவித்தார்.
அது சம்பந்தமாக விவரம் தெரியாத சிலர் அது பற்றிக் கேள்வி எழுப்பி, பிரச்சினை செய்வது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்னோவும் தேசிய முன்னணியும் இஸ்மாயில் சப்ரியை பிரதமராக முழு மனதோடு ஏற்றுக் கொண்ட பின்னர், அதனை சிலர் விமர்சிப்பது தேவையற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவில் கட்சி மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே, நேற்று முன்தினம் உச்சமன்ற உறுப்பினர்களுக்கும் சபா தலைவர்களுக்கும் அளித்த விருந்தில் உரையாற்றிய இஸ்மாயில் சப்ரி, தம்மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் கட்சியைப் பலவீனப்படுத்தும் என்று எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles