
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத ஷா ஆலம் உள்ளரங்கத்தை உடைத்துவிட்டு, புதிய அரங்கத்தை நிர்மாணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் Amirudin Shari (அமிருடின் ஷாரி) தெரிவித்தார்.
இது சம்பந்தமாகத் துல்லியமான ஆய்வும் பல தரப்பிடமிருந்து கருத்துகளையும் கேட்ட பின்னரே, இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஷா ஆலம் உள்ளரங்கு அடிக்கடி பழுதுபட்டு சிக்கலை ஏற்படுத்துவதாகவும், கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகுவதாகவும், நீர் குழாய்கள் சேதமடைந்திருப்பதோடு திடலும் படு மோசமாகப் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன் கூரைகள் அடிக்கடி வீசும் காற்றினால் பறந்து விழுவதால், அது பாதுகாப்பாக இல்லையென்று மலேசிய பந்து விளையாட்டுச் சங்கம் அறிவித்துள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
