
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த மஇகாவின் முன்னாள் துணைத்தலைவரான டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் இன்று இரவு மணி 8 யளவில் காலமானார்.
78 வயதான தமது தந்தை உறக்கத்திலேயே உயிர் நீத்ததாக அவரது புதல்வர் சுந்தர் தெரிவித்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட டான் ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் கடந்த 11 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார்.
1974 -ஆம் ஆண்டிலிருந்து 1982 ஆம் ஆண்டு வரை இரு தவணைகள் டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுப்ரமணியம், பின்னர் அரசியலில் இருந்து விலகும் வரையில் நான்கு தவணைகள் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றினார்.
அதோடு, 1995 -ஆம் ஆண்டிலிருந்து 2004- ஆம் ஆண்டு வரையில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார துணையமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மஇகாவின் கட்சித் தலைவராக துன் சாமிவேலு இருந்த கால கட்டத்தில் அவருடன் சுமூகமான உறவைக் கொண்டிருக்காத சுப்ரமணியம், 11 -வது பொதுத் தேர்தலின்போது போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
