
61 வயது நபரின் வேலையில்லாத நிலையைக் கேலி பேசிய அவரது அண்ணியையும் அண்ணனையும் அந்த நபர் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஈப்போ, பெர்ச்சாம், தாமான் பெர்ச்சாம் அமானில் உள்ள் வீட்டின் வரவேற்பறையில் Ooi Tin Lu (ஊய் தின் லூ), அவரின் கணவர் 64 வயதான Ng Chun Hon (இங் சுன் ஹோன்) ஆகியோரின் சடலங்கள் கிடக்கக் கண்டு பிடிக்கப்பட்டன.
அவர்களைக் கொன்ற நபர், அண்ணனின் காரை எடுத்துக் கொண்டு தப்பியோடி கெந்திங் மலையில் இரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவனிடமிருந்து ஒரு கத்தி, கயிறு, கூரான ஆயுதம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. அவந் மனநோயினால் பாதிக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
