25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கோவிட் தொற்றுக்குப் பின்னர் இந்தியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

🔥 Views : 6
👁 Reading Now : 31

கோவிட் தொற்றுக்குப் பின்னர் இந்தியர்களின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கி இருப்பதாக சிலாங்கூர் கெ அடிலான் இந்தியத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியர்களின் வருமானம் ஆண்டுக்கு 5.3 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருக்கும் வேளையில், அவர்களின் வறுமை ஒழிப்பு வெறும் 0.7 விழுக்காடாகவும் பூமி புத்ராக்களை விட குறைந்த வருமானத்தையே அவர்கள் பெற்று வருவதாகவும் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் குறிப்பிட்டனர்.
இந்தியர்களில் 16 விழுக்காட்டினர் மட்டுமே 3,000 ரிங்கிட் சம்பளத்தைப் பெறுவதாகவும், 14.3 விழுக்காட்டினர் வர்த்தகத் துறையில் அதுவும் 91 விழுக்காட்டினர் சிறு சிறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இந்தியர்களின் நிலையை உயர்த்த அரசு 10 கோடி ரிங்கிட்டை ஒதுக்கி, அவர்களைக் கைதூக்கி விட வேண்டுமென கெ அடிலான் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles