
சூலு சுல்தான் வாரிசுகளுக்கு 1,500 கோடி டாலர் இழப்பீட்டை மலேசியா வழங்க வேண்டுமென்ற பிரெஞ்சு நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கிடைத்துள்ளதாக சட்டத் துறை அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar (வான் ஜுனைடி துவாங்கு ஜாபார்) தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28இல் மாட்ரிட் நீதிமன்றம் விதித்த இந்த உத்தரவை பாரிஸில் உள்ள மேல் முறையீடு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சூலு சுல்தானின் வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய 1,490 கோடி டாலர் இழப்பீட்டுக்கு ஒரு பகுதியாக Azerbaijan அஸெர்பைஜானில் உள்ள இரு பெட்ரோனாஸ் துணை நிறுவனங்களை நீதிமன்ற அமீனா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
