
அம்னோ விண்ணப்பித்திருக்கும் சட்டத் திருத்த கோரிக்கையில் சங்கங்களின் பதிவகம் (ஆர்ஓஎஸ்) சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்படும் என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்துவின் தலைமைச் செயலாளரான ஹம்ஸா, அந்த விண்ணப்பத்தை ஆர்ஓஎஸ் இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆர்ஓஎஸ் தமது அமைச்சின் கீழ் வருவதால், அதன் முடிவை தாம் கட்டுப்படுத்துவதாகச் சொல்வது அபத்தம் என அவர் குறிப்பிட்ட்டார். மேலும், ஆர்ஓ எஸ்ஸின் முடிவு இம்மாதம் 16ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
