
கட்சித் தாவலை தடுக்கும் மசோதா வரைவுக்கு அமைச்சரவை எந்தவொரு கேள்வியும் இன்றி ஏகமானதாக ஏற்றுக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜூனைடி துவாங்கு ஜபார் (Wan Junaidi Tuanku Jaffar) தெரிவித்திருக்கிறார். ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தின்போது அந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதம் நடைபெறும் . ஜூலை 27 மற்றும் ஜூலை 28-ஆம் தேதிகளில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
