27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்பு

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் உள்பட 8 பேர் உள்ளனர். எம்.பி.க்கள் பலர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சி எம்.பி.க்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். நெருக்கடி அதிகமானதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
புதிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 11 பேர் உள்ளனர்.
ரிஷி சுனக்கிற்கு எம்.பி.க்களில் அதிக ஆதரவு இருப்பதால் அடுத்த பிரதமராக அவரே வருக்கூடும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. புதிய பிரதமரின் பெயர் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles