26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

“ராஜபக்சேவின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும்

வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக அரசியலில் ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி செயல்படக் கூடிய எடப்பாடி பழனிசாமி வீழ்ச்சியைத்தான் சந்திப்பார்கள்.
சாதி, மத பேதமில்லாத அ.தி.மு.கவில் சாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவுக்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகச் செலவு செய்து பொதுக்குழுவைக் கூட்டி, தன்னைப் பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி ஸ்ரீலங்காவை விட்டு ஓடினார்களோ, அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் வரும் என்று தினகரன் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles