
இந்தோனேசியப் பணிப்பெண்கள் இங்கு வேலை செய்வதற்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென்று மலேசிய மனிதவளத் துறை வலியுறுத்துவதால் தொழிலாளர்களை அனுப்ப அந்நாடு தற்காலிகத் தடையை அறிவித்துள்ளது.
இதனை அறிவித்த இந்தோனேசிய தூதர் ஹெர்மானோ, மனிதவள அமைச்சின் புதிய கட்டுப்பாடு இதற்கு முன்னர் ஏற்படுத்தியிருக்கும் உடன்பாட்டுக்கு முரணானது என்று குற்றம் சாட்டினார்.
ஜூலை 1ஆம் தேதி ஹெர்மோனோ பேசும்போது, இனி மலேசியாவுக்கும் மத்திய கிழக்கிற்கும் இந்தோனேசியா தொழிலாளர்களை அனுப்பவதை மறு பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
