
முருகனுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் காவடி தூக்குவதை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் அவமதித்துப் பேசியதை அடுத்து, அவர் மீது போலீசில் புகார் செயய்ப்பட்டுள்ளதாகப் பெர்சத்துவின் தகவல் பிரிவு உறுப்பினர் எஸ்.கோபி கிருஷ்ணன் தெரிவித்தார்.
24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் அவர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இனிமேலும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவரின் அலுவலக்திற்கு ஊர்வலமாகச் சென்று மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
