26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நஜிப்பிடமிருந்து 1எம்டிபி பணம் 1 மில்லியனைப் பெற்ற ஷாரிர் சமாட்டின் வழக்கு இன்று விசாரணை

நஜிப் ரசாக்கிடமிருந்து பெற்ற ஒரு மில்லியன் பணத்தை வருமான வரிக் கணக்கில் காட்டத் தவறிய அம்னோவின் மூத்த தலைவரும் பெல்டா தலைவருமான Shaarir Samad (ஷாரிர் சமாட்)டின் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது.
இந்த வழக்கானது நீதிபதி ஜாமில் ஹுசின் முன்னிலையில் ஜூலை 26-28, ஆகஸ்டு 8-11, செப்டம்பர் 5-8 மற்றும் அக்டோபர் 3-6 வரை செவிமடுக்கப்படும். ஷாரிர் சமாட்டின் சார்பில் வழக்கறிஞர் Fairoz Hussein Ahmad (ஃபரோஸ் ஹுசேய்ன் அமாட்) ஜமாலுடின் ஆஜராவார்.
அரசுத் தரப்பு 19 சாட்சியாளர்களை விசாரிக்கும். இந்த வழக்கு முதலில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதாக இருந்தது, எனினும் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
குற்றம் நிருபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறையும் 5 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles