
மசீசவின் முன்னாள் தலைமைச் செயலாளர் Ong Ka Suan (ஓங் கா சுவான்) அல்ட்ரா கிரானா நிறுவனத்திடமிருந்து அரசியல் நன்கொடையாக 920,000 ரிங்கிட்டைப் பெறவில்லை என்று மறுத்துள்ளார்.
அனைத்துலக வர்த்தகம், தொழில்துறையின் முன்னாள் அமைச்சருமான அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அபாண்டமானது என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தரத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மசீசவின் முன்னாள் அமைச்சர் Chan Kong sai (சான் கோங் சாயு)ம் 7.8 மில்லியன் பெற்றதாக டேவிட் டான் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்நிறுவனத்திடமிருந்து அமாட் ஸாஹிட் ஹமிடி சிங்கப்பூர் டாலர் 13.56 மில்லியன் அல்லது 42 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்ற வழக்கை தற்போது எதிர்நோக்கி வருகிறார். மேலும், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Sharir Hamdan (ஷாரில் ஹம்டான்) 1.162 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
இந்தப் பணம் சீன சுற்றுப் பயணிகளைக் கொண்டுவரும் குத்தகைக்காக வழங்கப்பட்டதாகும்.
