
அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் நாட்டின் விலைவாசி குறையும் என்று உறுதி கூற முடியாது என்று ஜிஹாட் குழுவின் தலைவர் Annuar Musa (அனுவார் மூசா) தெரிவித்தார்.
அம்மாதிரியான நடவடிக்கை எங்கும் நடந்திராதது, யாரும் நிரூபிக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை தூருன் மலேயா ஆர்ப்பாட்டக்கார்கள் அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்திருந்தனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் Rafidah Aziz (ரபீடா அஸிஸ்) அமைச்சர்களின் சம்பளத்தில் 20 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியது கவனத்தில் கொள்ளத்தக்கது.
