
சட்டத்துறையின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமட் எப்பெண்டி அலி அதிகார வரம்பை மீறியது தொடர்பில் அவருக்கு எதிராக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்சார்ல்ஸ் சந்தியாகோ போலீசில் புகார் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை SRC international மற்றும் 1 MDB முறைகேட்டிலிருந்து விடுவிப்பதற்காக அவர் மீதான விசாரணையை மூடி மறைப்பதற்கு முகமட் எப்பெண்டி அலி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என சார்ல்ஸ் தமது புகாரில் தெரிவித்துள்ளார். DAP-யின் மூத்த தலைவர் லிட் கிட் சியாங்கிற்கு எதிராக டான்ஸ்ரீ முகமட் எப்பெண்டி அலி தொடுத்திருந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி Azimah Omar தள்ளுபடி செய்திருந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சார்ஸ் சந்தியாகோ இந்த போலீஸ் புகாரை செய்துள்ளார்.
