
நாட்டில் கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் புயல் வேகத்தில் விரைவு படுத்தப்பட்டதால் 16,000-17,000 மரணங்கள் தடுக்கப்பட்டதாக மருத்துவக் கல்விக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலையரசு பெரியசாமி தெரிவித்தார். கோவிட் தொற்றினால் இதுவரை நாட்டில் 35,911 மரணங்கள் நேர்ந்துள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தப்படாமலிருந்தால், அந்த எண்ணிக்கை 52,149ஆக உயர்ந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் மொத்தம் 4,654,951 பேர் நோயினால் பீடிக்கப்பட்டு 4,572,712 பேர் மீண்டிருக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை வரை 294,542 பேர் இரண்டாவது பூஸ்டரை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
